உலகம் வெப்பமாதல் பற்றிய இசை ஆல்பம் “சீசன்ஸ்”!

ஹோம் ரெகார்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பாக கணேஷ் – குமரேஷ் இருவரும் இணைந்து “சீசன்ஸ்” என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். பருவ காலங்களை நாம் வசந்த காலம், மழைகாலம், வெயில்காலம், பனிக்காலம் என ஆறு வகைகளாக பிரித்திருக்கிறோம். ஆனால் உலகம் வெப்பமாகிக் கொண்டிருப்பதால் அந்தந்த காலங்களில் நிகழ வேண்டியவை தள்ளிப் போய் விடுகிறது.
அதனால் உலகத்தை காக்க நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்கிற உரிய கருத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆல்பம். கணேஷ் – குமரேஷ் – சின்மயி பாடியுள்ள இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
கணேஷ் – குமரேஷ் இருவரும் கே.பாலசந்தரின் “ஒரு வீடு இரு வாசல்” என்ற படத்தில் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். அத்துடன் N.T.R. உடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் குமரேஷ். அத்துடன் Dance Like a Man என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்கள்.
அத்துடன் இளையராஜா, A.R.ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ் உட்பட அனைத்து இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள் இருவரும்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
