ஜூன் 28 : அம்பிகாபதி - அன்னக்கொடி - துள்ளிவிளையாடு!!

ஒரே நாளில் தனுஷின் மூன்று படங்களும் ரிலீஸ் என்று வந்த செய்திகள் இப்போது இல்லை என்றாகி விட்டது. மூன்று படங்களுமே தனித்தனியாகதான் வெளியாகின்றன. தனுஷ் நடித்த ராஞ்ச்னா படத்தின் தமிழ் பதிப்பு அம்பிகாபதி இந்த வாரம் தான் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துடன் போட்டிக்கு மேலும் இரு படங்கள் வெளியாகின்றன.
தனுஷின் அம்பிகாபதி படத்துடன் போட்டி போட பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா ஜோடியாக நடிக்க பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரத் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அன்னக்கொடிக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படமும் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதேபோல் நீண்ட நாட்களுக்கு முன்பே தயாராகி விட்ட வின்சென்ட் செல்வாவின் துள்ளி விளையாடு படமும் இந்த வாரம் வெளியாகிறது. ஏற்கனவே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. தற்போது வெளியாக தயாராகி களத்தில் குதித்துள்ளது.
அம்பிகாபதியின் இந்திப்பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ் பதிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த படத்தை வாங்கியுள்ள அபிராமி ராமநாதன் தமிழ்நாடு முழுவதும் 200 தியேட்டர்களில் வெளியிட தயாராகி வருகிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
