முருகதாஸ் தேடும் மூன்று பேர்!

தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். அவர் தனது படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “நடிப்பில் ஆர்வமுள்ள 65 முதல் 75 வயது வரை உள்ள 3 முதியவர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உங்கள் புகைப்படங்களை Teammurugadoss@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நாடகம் மற்றும் மேடையில் நடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்கள் அவர் இயக்கி வரும் இந்தி படத்துக்கா, அடுத்து இயக்கும் விஜய் படத்துக்கா, அல்லது அவர் தயாரித்து வரும் படங்களுக்கா? என்பதை மட்டும் அவர் குறிப்பிடவில்லை.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
