Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நம்பியாருக்கு அப்புறம் 'சுவாமி ஸ்ரீகாந்த்'!!

•On October 25, 2013
Nambiar-Tamil-Movie-Srikanth-Sunaina-Photos51373628856
Share
Nambiar-Tamil-Movie-Srikanth-Sunaina-Photos51373628856 நண்பன் படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஓம் சாந்தி ஓம், நம்பியார் என தன்னை தூக்கிக் கொண்டு ஓடும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். நம்பியாரில் சந்தானம் உடன் பயணிக்கும் மிகப்பெரிய நம்பிக்கை. சீனுக்கு சீன் காமெடி களை கட்ட வைத்துள்ளனர் சந்தானம்-ஸ்ரீ ஜோடி. யூனிட்டே அதிர்ந்து சிரிக்கும் அளவிற்கு காட்சிகளை வடிவமைத்துள்ளார் புதுமுக இயக்குனர் கணேஷா. கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுனைனா இதுவரை லிட்டர் கணக்கில் எண்ணெய் விட்டு படிய தலைவாரிய கிராமத்துப் பெண்ணாகவே  நடித்துள்ளார். இதில் அழகு மிளிரும் நகரத்து பெண்ணாக வலம் வருகிறார். விஜய் அண்டனி இசையமைக்க, எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது நம்பியார். ஸ்ரீகாந்துக்கு நம்பியார் ஓகே. சரி அடுத்து என்ன? என்ற கேள்விக்கு விடையாக தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'சுவாமி ரா ரா' வை தமிழுக்கு தூக்கி வருகிறார். சுதீர் வர்மா இயக்கிய க்ரைம் சப்ஜெக்டான சுவாமி ரா ரா வெகு விரைவில் தமிழ் பேச இருக்கிறது. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்க, பிரபல ஹீரோயினிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கோல்டன் ஃப்ரைடே ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.