இந்த முறை மெலடி டூயட் பாடிய விஜய்!!

துப்பாக்கி, தலைவா படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் இந்த படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இப்படத்தை நேசன் இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.
பல படங்களில் பாடிய விஜய் நீண்ட காலம் கழித்து துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடினார். இதையடுத்து தலைவா படத்தில் அவர் பாடிய வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் ஹிட்டானது.
இந்நிலையில் அவர் நடித்து வரும் ஜில்லா படத்திலும் ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்கும் என கருதி படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளர் டி.இமானும் விஜயை அணுகி பாடவைத்தனர். இந்த முறை அவர் பாடியிருப்பது மெலடி டூயட் பாடல்.
இது குறித்து ஜில்லா படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் கூறும்போது, “விஜய், ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து பாடிய மெலடி பாடலை பதிவு செய்தேன். பாடல் வரிகளை வைரமுத்து சார் எழுதியிருக்கிறார். இறைவனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
 ,
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
