கமலின் "கிரேசி" கூட்டணி விரைவில்!

லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி, நடிக்கும் படம் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாக ஆரம்பித்துள்ளது. படத்திற்கு உத்தம வில்லன் என்று பெயர் வைக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் படத்தை ரூ 45 கோடி பட்ஜெட்டுக்குள், அவ்வை சண்முகி மாதிரி முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக எடுத்துவிடும் திட்டத்தில் உள்ளனர். படத்துக்கான பணிகள் துவங்கியுள்ளன. கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். ஏற்கனவே கமல், கிரேசி மோகன் ஜோடி சேர்ந்த அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா போன்ற படங்கள் அமோக வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடதக்கது.
இந்த படத்தில் கமலுடன் இணைத்து முதல் முறையாக விவேக் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தியை கமல் தரப்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்குமாறு காஜல் அகர்வாலை கேட்டனர். அவரோ டேட்ஸ் இல்லை என்று கூறி நடிக்க மறுத்து விட்டார். இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா அல்லது லேகா வாஷிங்டன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விஸ்வரூபம் 2 முடிந்த உடன் இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் துவங்குகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
