Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நான்தான் "வருத்தபடாத வாலிபர் சங்க" தலைவர் பேசுறேன் – சிவகார்த்திகேயன்!

•On June 13, 2013
vvs
Share
vvs விண்ணைத்தாண்டி வருவாயா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் P.மதன் தயாரிப்பில், “ஒரு கல் ஒரு கண்ணாடி” இயக்குனர் ராஜேஷ்.M வசனத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் "வருத்தபடாத வாலிபர் சங்கம்". சிவகார்த்திகேயனுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். தெலுங்கில் வெற்றிபெற்ற "பஸ் ஸ்டாப்" படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் வெண்ணிலா சூரி, சௌந்தர் ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் வருத்தபடாத வாலிபர் சங்க தலைவராக சிவகார்த்திகேயனும், செயலாளராக சூரியும் நடிக்கின்றனர். சத்யராஜ் சிவகார்த்திகேயனின் எதிர்கோஷ்டியின் தலைவர். நட்புக்காக ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் பிந்து மாதவி. படத்திற்கு இசை டி.இமான். ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம். விவேக்ஹர்ஷன் எடிட்டிங். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ராஜேஷ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த பொன்ராம் இயக்குகிறார். இணை தயாரிப்பு ஜேம்ஸ். ஏறக்குறைய முடிந்து இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை, தேனி, திருச்சி மற்றும் பெரம்பலூரில் நடைபெற்று வருகிறது. ஜூலையில் படத்தின் இசையும், ஆகஸ்டில் படமும் வெளியாகிறது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.