ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் தமாகா!!

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், பரத்பாலா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தனுஷ், பார்வதி நடித்திருக்கும் படம் மரியான். படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் மே 31 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சில கடைசி நிமிட வேலையால் படம் தள்ளிப்போனது.
அதே நேரத்தில் வேறு சில படங்களும் முன்னரே வெளியீட்டுக்கான வேலைகளில் இறங்கிவிட்டதனால், ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மரியான் வெளியிட முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் ஜூன் 21ஆம் தேதி தனுஷின் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
தனுஷின் முதல் இந்திப்படம் ராஞ்சனா ஜுன் 21 வெளியாகிறது என பல மாதங்கள் முன்பே அறிவித்திருந்தனர். ராஞ்சனா அம்பிகாபதி என்ற பெயரில் அதே ஜுன் 21 அன்று தமிழில் வெளியாகிறது. தனுஷின் இந்திப் படம் காரணமாக மரியானின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதே நாளில் மரியான் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைத்துள்ளார். ஒரு வருடம் காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு புல் மீல்ஸ். ஆக ஜூன் 21 ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் தமாகா.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகமலின் "கிரேசி" கூட்டணி விரைவில்!
Next Postயார் இந்த ’சினேகாவின் காதலர்கள்’??
