அகவை 60-ல் உலகநாயகன்!! ரஜினி வாழ்த்து!

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரஜினிகாந்த், மணிரத்னம், சுஹாசினி, அர்ஜூன், குஷ்பு உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கமல் தனது பிறந்தநாளை சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் டைரக்டர் மணிரத்னம், அவரது மனைவி சுகாசினி, நடிகர்கள் ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட சில முக்கிய திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, நாமக்கல் கமல் நற்பணி மன்றம் சார்பாக ஏழை பெண்களுக்கு 15 தையல் மிஷின்கள், மத்திய சென்னை ரசிகர்கள் சார்பாக மாற்றுத்திறனாளி இருவருக்கு மாற்றுத்திறனாளி சைக்கிள், வடசென்னை சார்பாக 15 ஆயிரம் நிதியுதவி, திருவண்ணாமலை ரசிகர்கள சார்பாக அனாதை குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான காலணிகள் வழங்கப்பட்டன. பின்னர் கமல், தனது ரசிகர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டதோடு தனது விஸ்வரூபம்-2 படம் பற்றியும் அவர்களோடு சேர்ந்து கலந்துரையாடினார்.
இதேப்போல் கமலின் பிறந்தநாளை தமிழகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கூடவே ரத்ததானம், கண்தானம் போன்ற சமூக சேவைகளிலும் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமக்கள் பாராட்டும் கிளைமாக்ஸ் “வலியுடன் ஒரு காதல்”!!
Next Postஅஜித்தின் வீரம் டீசர் வெளியீடு!!
