Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மக்கள் பாராட்டும் கிளைமாக்ஸ் “வலியுடன் ஒரு காதல்”!!

•On November 8, 2013
images
Share
images மாதாஸ் பிளசிங் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ரவிராஜேஷ் தயாரித்துள்ள படத்திற்கு “வலியுடன் ஒரு காதல்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கௌரி நம்பியார் நடிக்கிறார். சுரேஷ் வின்சென்ட், லென்சின், சபா, ஜே.கே. செல்வா, கோபால், கெவின் மற்றும் உமா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - எஸ்.செல்வகுமார், இசை - ஜே.கே.செல்வாஹ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் சி.எம்.சஞ்ஜீவன். படம் பற்றி இயக்குனர் “வழக்கமாக வரும் ஆரம்பமே..கிராமத்து நண்பர்களுடன் ஊர் சுற்றுவது தான் நாயகனின் வேலை அப்படி ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் போது பக்கத்து ஊரில் உள்ள பணக்கார பெண்ணை காதலிக்கிறார். அந்த பெண்ணும் காதலிக்கிறாள் ஆனால் அவர்கள் குடும்பத்தில் எதிர்ப்பு அதனால் தன் காதலை நாயகனிடம் சொல்லாமல் மறைக்கிறாள். ஒரு கட்டத்தில் நாயகன் ஏன் காதலை மறைக்கிறாய் என்று நாயகியிடம் கேட்க உடனே அவள் காதல் வாழ வேண்டும் காதலனும் வாழ வேண்டும் என்று கூறுகிறாள்.. பிறகு அவளும் காதலிக்க இருவரும் தனிமையில் சந்தித்து பேசுகிறார்கள் அப்போது அதை கதாநாயகியின் முறைமாமன் பார்த்துவிட இருவரும் சண்டை போட அதை பார்த்து கதாநாயகி மயக்கமாகிறார். மயங்கிய நாயகியின் நிலை என்ன? நாயகனின் நிலை என்ன? இருவரும் என்ன ஆனார்கள் என வலியுடன் காதல் தொடர்கிறது இதுதான் படத்தின் திரைக்கதை. இறுதியில் கல்யாணம், மரணம் என்று வழக்கமான கிளைமாக்ஸாக இல்லாமல் திகைப்பூட்டும்  யூகிக்க முடியாத முறையில் மிகவும் புதுமையான கிளைமேக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது இந்த கிளைமேக்ஸ் அனைவராலும் பாராட்டப்படும் என்கிறார்  இயக்குனர் சி.எம்.சஞ்ஜீவன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.