வரும் 27ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமணம்!

‘வெயில்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர், ஜி.வி.பிரகாஷ் குமார். தொடர்ந்து கிரீடம், மதராச பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள், தாண்டவம், பரதேசி, தலைவா ஆகிய படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். பாரதிராஜா, மகேந்திரன் போன்ற மூத்த தலைமுறை இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார்.
பள்ளி தோழியான பின்னணி பாடகி சைந்தவிக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. இந்த காதல் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணத்தை எட்டியுள்ளது.
ஜீ.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி திருமணம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, அன்று மாலை 6-30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பு குடும்பத்தினரும் கவனித்து வருகிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
