மூன்றே நாளில் 21 கோடி - தனுஷ் படத்தின் சாதனை!

தனுஷ் நடித்த முதல் இந்தி படம் ராஞ்ச்னா, கடந்த வாரம் உலகம் முழுவதும் இந்தியில் வெளியாகி முதல் மூன்றே நாட்களில் 21 கோடியை வசூலித்துள்ளது.
தனுஷ், சோனம் கபூர் நடித்த இந்த படத்தை பார்த்த வட இந்திய மக்கள் தனுஷின் நடிப்பை புகழ்ந்து தள்ளுகின்றனர். படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்றும் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பாடி பில்டர் பாலிவுட் வாலாக்களுக்கு நடுவில் ஆள் பார்க்க ஒல்லியாக இருந்தாலும் நடிப்பில் தன்னை யார் என்று நிரூபித்திருக்கிறார். அதனால் தான் பாலிவுட்டும், வட இந்திய மீடியாக்களும் அவரை கொண்டாடுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ராஞ்ஹனா படம் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளது. வெள்ளிகிழமை 5.15 கோடியும், சனிக்கிழமை 6.75 கோடியும், ஞாயிற்றுகிழமை 9.10 கோடியும் வசூலித்துள்ளது.
இந்த படத்தோடு சேர்ந்து வெளியான சுசிகணேஷ் இயக்கிய ஷார்ட்கட் ரோமியோ, மற்றும் எனிமி போன்ற படங்கள் சுமாரான வசூலையே பெற்றுள்ளன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
