Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எல்லா இசையமைப்பாளர்களும் “பழம்” - இசையமைப்பாளர் தமன்!

•On June 25, 2013
pattathu
Share
pattathu பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் பட்டத்து யானை. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விஷாலின் நண்பர் ஆர்யா பாடல்களை வெளியிட தயாரிப்பாளர் கேயார் பெற்றுகொண்டார். விழாவில் விஷால் பேசும்போது, ''பட்டத்து யானை முழு நேர நகைச்சுவை படமாக கமர்சியலாகவும், அதே சமயம் தரமான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். என் குருநாதர் அர்ஜுனின் மகள் தான் கதாநாயகி. ஐஸ்வர்யாவுக்கு இது முதல் படம்.. நல்ல திறமைசாலி. எங்கள் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் அவருக்கு அனைவரின் ஆதரவையும் கோருகிறேன். ஒரு படத்தில் நாயகன் - நாயகிக்கிடையே உள்ள கெமிஸ்டிரி சிறப்பாக இருந்தால் படம் நன்றாக வரும். ஆனால், நாயகனுக்கும் - இயக்குனருக்கும் இடையே கெமிஸ்டிரி சிறப்பாக இருந்தாலும் படம் நன்றாக அமையும். இந்த படத்தில் எனக்கும், இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு இடையே கெமிஸ்டிரி நன்றாக இருந்தது. இசை பயில்வான் தமன் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன'' என்றார். விழாவில் பேசிய தமன், "இசையமைப்பாளர்கள் எல்லோரும் பழம் போன்றவர்கள். இயக்குனர்கள் தான் எங்களை பிழிந்து ஜூஸ் ஆக்கி கொள்ள வேண்டும். இதை போல இயக்குனர் பூபதி பாண்டியன் என்னை பிழிந்து எடுத்து இசை சிறப்பாக வர உறுதுணையாக இருந்தார். அவரிடம் உள்ள இசைஞானத்தை பார்க்கும்போது அவர் நிச்சயம் ஒரு இசையமைப்பாளராகவும் வருவார்" என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.