Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இண்டோர் புட்பால் விளையாட்டை மையப்படுத்தி வரும் “எதிர்வீச்சு”!!

•On November 20, 2013
Ethirveechu-Movie-Stills-1
Share
Ethirveechu-Movie-Stills-1 மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகுல் மற்றும் எஸ்.ராஷிக் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “எதிர்வீச்சு”. இந்த படம் இந்தியாவில் “எதிர்வீச்சு” என்ற தலைப்பிலும், “கோல்” என்ற தலைப்பில் வெளிநாடுகளிலும் வெளியிடப்படுகிறது. படத்தின் கதாநாயகனாக “சுண்டாட்டம்” படத்தில் நடித்த இர்பான் நடிக்கிறார். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த ரஸ்னா நடிக்கிறார். சின்னி ஜெயந்த், நளினி, சிங்கமுத்து, வையாபுரி, ராஷிக், மலேசியாவைச் சேர்ந்த உதயா, ரதி, நிர்மலா, கிளிமாஞ்சாரோ, துஷாரா, விநிஷா, சலீம், நஸீரா, இப்ராகிம், ஷைபூதின், ஷனுஷி, இத்ரீஸ் மற்றும் ஷாகுல் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பிர்லாபோஸ். இசை – ராஜாமணி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் கே.குணா. இவர் மௌனம் சம்மதம், ஏர்போர்ட், படிச்ச புள்ள போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இது. படம் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ராஷிக் கூறும்போது, “இந்த படம் இண்டர்நேஷனல் கேம் புட்சால் (international game futsal) என்கிற இண்டோர் புட்பால் (indoor foodball) விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம். இந்த விளையாட்டு தற்பொழுது உலக முழுவதும் பரவி வருகிறது. இதில் இர்பான் மலேசிய புட்பால் வீரராக  நடிக்கிறார். படப்பிடிப்பு மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றது. மிகவும் பொழுதுபோக்குடனும், விளையாட்டு கலையுடனும் இணைந்து வெளிவரும் இந்த படம் மக்களுக்கு நிச்சயமாக ஜனரஞ்சகமாக அமையும் என்கிறார் தயாரிப்பாளர் எஸ். ராஷிக்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.