Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இரண்டாம் உலகத்துக்கு தடையாக சில தயாரிப்பாளர்கள்!

•On November 19, 2013
Irandam-Ulagam-Movie-From-November-221
Share
Irandam-Ulagam-Movie-From-November-221 செல்வராகவன் இயக்கத்தில் 6௦ கோடிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் இரண்டாம் உலகம். ஆர்யா, அனுஷ்கா நடிக்க பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ளது. படம் வரும் 22-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இரண்டாம் உலகம் படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கு, அட்வான்ஸ் தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சிலர் பிரச்சினை எழுப்பியுள்ளனர். இதனால் படம் வெளியாகுமா என்பதில் ஐயம் நிலவுகிறது. தயாரிப்பாளர்கள் சிலர், “எங்களுக்கு படங்கள் இயக்கி தருவதாக கூறி, இயக்குனர் செல்வராகவன் ஏமாற்றிவிட்டார், நாங்கள் கொடுத்த பணத்தை அவரிடமிருந்து வாங்கி கொடுங்கள், இல்லையேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என, சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சினிமா மற்றும் “டிவி சீரியல் தயாரிப்பாளர் கில்டிலும் புகார் அளித்துள்ளனர். இந்தியில், பிரபல சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான, ராஜ்குமார் சந்தோஷி உட்பட, சில தயாரிப்பாளர்கள், இந்த புகார்களை தெரிவித்துள்ளதால் கொஞ்சம் கேள்விக்குறியாகவே உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.