Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரொமான்ஸ் பண்ணும் “மைனா” சேது!!

•On November 20, 2013
sethu
Share
sethu தொலை தொடர்ப்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ அந்த அளவுக்கு பாதகமானது கூட. இந்த உண்மையை பல செய்திகள் வாயிலாக நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்த மையகருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் மனதில் மாயம் செய்தாய்(MMS). Full house entertainment நிறுவனத்தின் சார்பில் ஜெய்சன் புலிகுட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் தயாரித்து உள்ள இந்த காதல் கலந்த thriller படத்தில் நடித்து உள்ளோர் சேது (மைனா புகழ்), பிரின்ஸ், ரிச்சா பானாய், திஷா பாண்டே, மனோபாலா மற்றும் பலர் நடித்து உள்ளனர். சேதுவின் நடிப்பும், படத்தின் திரைக்கதை வசனமும் மிகப்பெரிய பலம் என்பது பார்த்தவர்களின் கணிப்பு. இந்த படத்தை பற்றிய தயாரிப்பாளர்களின் கருத்து. 'இது எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. பட தயாரிப்பின் நுணுக்கங்களை நாங்கள் புரிந்துக் கொள்ளவும் அறிந்து கொள்ளவும் எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இது.' மனதில் மாயம் செய்தாய்' படத்தின் இசை அமைப்பாளர் மணிகாந்த் கத்ரி அவர்களின் இசைக்கு கிடைத்த வரவேற்பும், இந்த படத்தின் முதல் பிரதியை பார்த்த திரை உலகினர் கொடுத்த ஆதரவும் எங்களது நிறுவனத்தின் சார்பில் மேலும் தரமான படங்களை தயாரிக்க ஊக்குவிக்கிறது என்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.