Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அள்ளி கொடுத்த தனுஷ், வாரி கொடுக்கும் கே.வி.ஆனந்த்!

•On June 5, 2013
383523_578113515566987_1314295468_n
Share
383523_578113515566987_1314295468_n இருபதிலிருந்து முப்பது நாட்களுக்குள் மொத்த படத்தையும் முடித்து ரிலீசுக்கு தயார் செய்தது எல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் ஒரு போட்டோஷூட் முடித்து போஸ்டர் வெளியிடுவதற்கே 30 நாட்கள் ஆகிறது. ஆனாலும் நடிகர்கள் கால்ஷீட் கொடுப்பது 50 நாள், 60 நாள் என்று குறிப்பிட்ட நாட்கள் தான், ரஜினி, கமல், அஜித், விஜய் என்று சில நடிகர்களை  தவிர்த்து. கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக மொத்தம் 150 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ். இதற்கு முன் தனுஷ் இவ்வளவு நாட்கள் கால்ஷீட் எந்த படத்திற்கும் கொடுத்ததில்லை. கே.வி.ஆனந்த் தனுஷிடம் 150 நாட்கள் கால்ஷீட் கேட்டபோது, “அடேயப்பா 150 நாளா? நான் இரண்டு படத்துக்கே இவ்வளவு கால்ஷீட் கொடுத்ததில்லையே என்று வாயை பிளந்தாராம். அதற்கு நான் எடுக்கப்போகும் படம் அப்படி. அதற்கு இவ்வளவு கால்ஷீட் கட்டாயம் வேண்டும் என்றாராம் கே.வி.ஆனந்த். கால்ஷீட் மட்டும் அதிகமில்லை, உங்கள் சம்பளமும் அதிகம் தான் என்ற கே.வி.ஆனந்த், அதோடு நில்லாமல் தனுஷின் வழக்கமான சம்பளத்தை விட இப்படத்துக்காக அதிகமாக வாங்கிக்கொடுத்துள்ளாராம். அதன்பிறகு ஏன் வாயை திறக்கப்போகிறார் தனுஷ். படப்பிடிப்புக்கு எப்போது வரணும் என்று மட்டும் தான் கேட்டாராம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.