வெற்றிக்கு முன்பே அடுத்த படம் - கலக்கும் முதல் பட இயக்குனர்கள்!

இப்போதெல்லாம் முதல் படம் ஹிட் ஆனால் அந்த இயக்குனரை அப்படியே அள்ளிக் கொள்கிறார்கள் தயாரிப்பாளர்களும், நாயகர்களும். "எங்கேயும் எப்போதும்" சரவணன் தற்போது விக்ரம் பிரபுவை இயக்கி வருகிறார். "சுந்தரபாண்டியன்" பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை வைத்து பிரமாண்டமான பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். "பிட்சா" கார்த்திக் சுப்புராஜ் சித்தார்த்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.
தற்போது இந்த லிஸ்ட்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் சமீபத்தில் வெளிவந்த குட்டிப்புலி படத்தின் இயக்குனர் முத்தையா. சசிகுமார் - லட்சுமிமேனன் நடிப்பில் முத்தையா இயக்கிய முதல் படம் குட்டிப்புலி, கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பெரிய நடிகர்களின் படத்துக்கு இணையான ஆரம்ப வசூலைப் பெற்றது.
இந்நிலையில் அடுத்த படம் இயக்க தயாராகி விட்டார் முத்தையா. கவுதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார். ஏற்கனவே சிலம்பாட்டம் சரவணன் இயக்கும் 'சிப்பாய்', ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' மற்றும் ஒரு கன்னட படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் கவுதம் கார்த்திக்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
