அஜித்துக்கு குரல் கொடுக்கும் இசைப்புயல்!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஒரு இசையமைப்பாளரின் இசையில், இன்னொரு இசையமைப்பாளர் ஒரு பாடல் பாடும் சூழல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மரியான் படத்தில் “இசைப்புயல்” ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடிக் கொடுத்தார்.
இதுகுறித்து, யுவன் போலவே நீங்களும் அவரது இசையில் ஒரு பாடல் பாடி கொடுப்பீர்களா? என்று ரஹ்மானிடம் கேட்டதற்கு, "சந்தர்ப்பம் அமையும் போது பார்த்து கொள்ளலாம்" என்றார் ரஹ்மான்.
இந்நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் யுவன்சங்கர் ராஜா, அப்படத்தில் ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரகுமானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானும் பாடி தருவதாக உறுதி அளித்துள்ளாராம். ஏற்கனவே அஜித்துக்கு வரலாறு படத்தில் அவரது இசையிலேயே ஒரு பாடல் பாடியுள்ளார் ரஹ்மான்.
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாகவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் உள்ளனர். அண்மையில் தான் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெற்று முடிந்தது.
இது இப்படியிருக்க தனது சமூக வலைத்தளத்தில் இந்த செய்தியை மறுத்துள்ளார் யுவன். ஒருவேளை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்களோ!!
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
