Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கல்யாணம் கட்டப்போகிறார் ‘அழகி’ மோனிகா.. ஸாரி ரஹீமா.

•On January 5, 2015
CutPicture.com_2015-Jan-05_12_43_11
Share

‘அழகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடிகொண்ட அழகி மோனிகா படங்கள் எதிலும் அதிகமாக கமிட்டாகாமல் ஒதுங்கினார். அத்துடன் கடந்த வருடம். தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாக சொல்லி நமக்கு மிகப்பெரிய ஷாக்கும் கொடுத்தார்..!

அந்த சமயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, முஸ்லீம் பையன் யாரையாவது லவ் பண்ணி, அவரை திருமணம் செய்வதற்காக வேண்டி மதம் மாறுகிறீர்களா என்று கேட்டபோது, “காதலுக்காக மதம் மாறுவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்” என்று சொன்னார்.

ஆனால் இவர் இப்போது திருமணம் செய்யப்போவது மாலிக் என்கிற முஸ்லீம் வாலிபரைத்தான்.. மதுரையை சொந்த ஊராகக்கொண்ட இந்த நபர் மோனிகாவின் தந்தையின் நண்பரின் மகன் தான். வரும் ஜனவரி-11ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எப்படியிருந்தாலும் மோனிகா இல்லற வாழ்க்கையில் நுழைந்து நலம் பல பெறட்டும்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.