Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புத்தக விழாவில் இடம்பெறவிருக்கும் ரஜினி புத்தகம்..!

•On January 5, 2015
Super Star copy-1
Share

ரஜினியை பற்றியோ அல்லது ரஜினி பெயரிலோ பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அந்தவகையில் இப்போது ‘சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்’ என்கிற பெயரில் ஒரு புத்தகம் வெளியாக இருக்கிறது. இந்தப்புத்தக்கத்தை எழுதியுள்ளவர் வாசகர் வட்டாரத்தில் பிரபலமாக அறியப்படுகிற ஒரு எழுத்தாளர் அஜயன் பாலா தான்.

இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழுக்காக முன்பு அஜயன் பாலா ‘சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தான் தற்போது அதே பெயரில் புத்தகமாக தயாராகியுள்ளது. அஜயன் பாலாவினால் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்ட சினிமா, இலக்கியம், பெண்ணியம், வாழ்வனுபவம், ஆளுமைகள் என வேறுபட்ட பரிணாமங்களை சார்ந்த இருபத்தைந்துக்கு மேற்பட்ட கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. நாதன் பதிப்பகம் மூலமாக வெளியிடப்படும் இந்த நூல் வரும் புத்தக கண்காட்சியில் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.