அட கடவுளே... நயன்தாராவுக்கு காது கேட்காதாமே..?

‘போடாபோடி’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடி தான்’. படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்..! இதுவரை கதைக்காக வயதான வேடத்தில் கூட நடித்துவந்த விஜய்சேதுபதி இந்தப்படத்தில் பக்கத்துவீட்டு பையன்போல படு யூத்தாக மாடர்ன் கெட்டப்பில் நடித்துவருகிறார்.
அதேபோல இதுவரை காதல் டூயட் பாடும் கதாநாயகியாக நடித்துவந்த நயன்தாராவும் இதில் காதுகேட்கும் தன்மை அற்ற பெண்ணாக, ஹியரிங் எய்ட் பொருத்திக்கொண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் நடைபெற்றுவந்த இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகல்யாணம் கட்டப்போகிறார் ‘அழகி’ மோனிகா.. ஸாரி ரஹீமா.
