Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

RCB வெற்றி பெற்றால் விஜய் மல்லையா கடனை கூட அடைப்பேன். வைரலாகும் சீரியல் நடிகரின் வீடியோ!

On June 4, 2025
n6669985561748976299830053349ee8c2cd22c11637dfb236d9b33ab02ff0662bfd9f79c8bc7783afec10e
Share

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் ஐபிஎல் 18 வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டி பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் நிலையில் மைதானம் முழுவதும் சிவப்பு நிற ஜெர்சியால் ரசிகர்கள் கூட்டம் நிறைந்துள்ளது.

சிவப்பு அலைகடல் போல் ரசிகர்கள் திரண்டு வந்துள்ள நிலையில் இன்று யார் வெற்றி பெறுவார் யார் கோப்பையை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஏனெனில் கடந்த 18 வருடங்களாக பஞ்சாப் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் இந்த முறையாவது கோப்பையை வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்நிலையில் தற்போது ஹிந்தி சீரியல் நடிகர் நகுல் மேத்தா தற்போது விராட் கோலி ஜெயிக்க வேண்டும் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இவர் தமிழில் பிரபல டிவியில் ஒளிபரப்பான காதலே காதலே சீரியலில் நடித்துள்ளார்.

இவர் தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் இறுதியாக 18 வருடங்களுக்குப் பிறகு நாம் கோப்பையை தூக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. விராட் கோலி தன்னுடைய முதலாவது ஐபிஎல் கோப்பையை உயர்த்த இருக்கிறார். ஆர்சிபி வெற்றி பெற்றால் நான் கன்னடம் கற்றுக்கொண்டு விராட் கோலிக்காக ஒரு கோவில் கட்டுவேன்.

தென்னிந்திய உணவுகளை சாப்பிடவேன். விஜய் மல்லையாவின் கடன்களை கூட அடைப்பேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.