Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மோகன்லால் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டில் வெளியீடு

On April 16, 2023
Valiban
Share
நடிகர் மோகன்லால் நடிக்கும் "மலைக்கோட்டை வாலிபன்" என்னும் திரைப்படம் பன்மொழியில் உருவாகிறது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாளத் திரையுலகின் முன்னணி படைப்பாளியான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் படம் 'மலைக்கோட்டை வாலிபன்' . இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் படத்தின் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஜான் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜான், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புத்தாண்டு தினத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் படக் குழு 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது. அனல் பறக்கும் தோற்றத்தில் மோகன்லால் ஃபர்ஸ்ட் லுக்கில் தோன்றுவதால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கத்தில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வரும் முன்னணி நட்சத்திரக் கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்திற்கு பி. எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்திற்கு, தீபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.