Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தெய்வ மச்சான் விமர்சனம்

On April 22, 2023
Deivamachan
Share

விமல், அனிதா சம்பத், பால சரவணன், ஆடுகளம் நரேன், மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தெய்வ மச்சான்”. இப்படத்தை மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.

கதைப்படி,

கிராமத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் விமல். இவருடைய தங்கை அனிதா சம்பத்திற்கு திருமண வரன் பார்த்து வருகிறார்கள். அப்போது, அந்த கிராமத்தில் பண்ணையாராக இருக்கும் ஒருவரின் தம்பியை அனிதா சம்பத்திற்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்க, அவரின் வயது அதிகமாக இருப்பதால் தட்டிக் கழித்து விடுகின்றனர்.

அதன்பின்னர் ஒரு வரன் கிடைக்க இதை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று விமல் தீவிரம் காட்டி அந்த வரனை பேசி முடிக்கிறார்.

ஒருவழியாக இந்த திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்காததால் இந்த திருமணத்தை நிறுத்த பண்ணையார் முயற்சி செய்கிறார்.

இதனிடையே விமலின் கனவில் வரும் சாட்டைக்காரன்(வேல.ராமமூர்த்தி), யார் இறக்க போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்கிறான். அவர் சொல்லின்படியே அந்த மரணங்களும் நிகழ்கிறது.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு விமலின் கனவில் வரும் சாட்டைக்காரன் இரண்டு நாட்களில் உன் மச்சான் இறந்துவிடுவார் என்று சொல்கிறார்.

இதனால் பதறிப்போகும் விமல் இந்த திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த திருமணம் நடந்ததா? விமல் கனவில் வந்த விஷயம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கிராமத்து பின்னணியில் நடக்கும் "தெய்வ மச்சான்" திரைப்படம் மண்மனம் மாறாமல் நடித்து கொடுத்துள்ளார் விமல். நீண்ட இடைவேளைக்கு பின் கமெர்சியல் ஹிட் கொடுத்துள்ளார் விமல்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனிதா சம்பத்துக்கு நடிப்பில் கூடுதல் கவனம் தேவை. பாத்திரத்தின் வலு அறிந்து நடிக்க தவறியுள்ளார்.

ஒரே கான்செப்ட் ஜோக்கை படம் முழுக்க வைத்து சிரிக்க வைத்திருக்கிறார் பால சரவணன். இந்த படத்தின் மூலமாகவும் அவர் ஒரு வெர்சடைல் ஆக்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

உடன் நடித்திருக்கும் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.

குடும்ப உறவுகளை காமெடி கலந்த படமாக தெய்வ மச்சான் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மார்டின் நிர்மல் குமார். வழக்கமான கதையை காமெடி கலந்து கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார்.

முதல் பாதியில் கூடுதல் காமெடியை சேர்த்திருந்தால் ஆடியன்ஸுக்கு முழு திருப்தி கிடைத்திருக்கும்.

கிராமத்து பின்னணியை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ்.

படத்தின் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் ஓகே என்ற அளவிற்கு கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் காட்வின்.

தெய்வ மச்சான் - காமெடி கேரண்டி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.