மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்காக கணவனை எரித்துக் கொன்ற அத்தை: கர்நாடகாவில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கமெசாக என்னும் கிராமத்தில் சுப்பிரமணிய வயது 62 என்ற முதியவருக்கு 55 வயதில் மீனாட்சி என்ற மனைவி உள்ளார்.
இதில் சுப்பிரமணியா கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போன நிலையில் மீனாட்சி காவல் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியாவை தேடி வந்த நிலையில் கடந்த 8-ம் தேதி அதே கிராமத்தில் குப்பை கொட்டும் இடத்திற்கு அருகே ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அவரின் மீது மரக்கட்டைகளை போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து பிணத்தை அங்கு போட்டுள்ளனர். அந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அது சுப்பிரமணியாவின் சடலம் என்பது தெரியவந்தது. பின்னர் மீனாட்சியைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது மீனாட்சிக்கு வீட்டில் கட்டிடப் பணிகள் செய்ய பிரதீப் ஆச்சாரி என்ற 32 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பிரதீப் ஆச்சாரி சுப்பிரமணியாவின் தங்கை மகன்.
இவர்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் இந்த விவகாரம் மீனாட்சியின் கணவனுக்கு தெரிய வரவே அவர் இருவரையும் கண்டித்தார். இதனால் பிரதீப் கூலிப்படையை சேர்ந்த சித்தேஷ் (35), விஷ்வாஷ் ஆகியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அவரை தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளார். அதன்படி அவர்கள் அவரை தனியாக அழைத்து கழுத்தை நெரித்துக்கொன்று பின்னர் பிணத்தை எரித்தது தெரிய வந்தது. தற்போது இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவரை கடத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
