ஆசை வார்த்தை காட்டி அபேஷ் பண்ண மசாஜ் சென்டர் அழகி!

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபரான சார்லஸ் (வயது 50) இவர் தேக்கு போன்ற மரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். சார்லஸ் அடிக்கடி சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் மையத்திற்கு சென்று மசாஜ் செய்து கொள்வது வழக்கமாக இருந்தது. அந்த வகையில் அந்த மசாஜ் மையத்தில் பணியாற்றிய ஆண்ட்ரியா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அண்மையில் தொழிலதிபர் சார்லசை செல்போனில் தொடர்பு கொண்ட ஆண்ட்ரியா தனக்குத் தெரிந்த ரேகா சாவித்திரி என்ற பெண் சென்னை சூளைமேட்டில் சொகுசு மசாஜ் விடுதி நடத்தி வருகிறார் என்றும் அங்கு மசாஜ் செய்து கொள்வதோடு வித்தியாசமான உல்லாசத்தை அனுபவிக்கலாம். அங்கே வந்தால் உங்களுக்கு இன்ப விருந்து காத்திருக்கிறது என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.
இதனை நம்பி ஆண்ட்ரியா குறிப்பிட்ட சூளைமேடு விடுதிக்கு சார்லஸ் சென்றுள்ளார். அங்கு ரேகா சாவித்திரி என்ற பெண்ணும் இரண்டு ஆண்களும் இருந்தனர். அங்கு சென்று சார்லஸிடம் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஆண்கள் இருவரும் சேர்ந்துகொண்டு, 'இந்த வயதில் உனக்கு இதெல்லாம் தேவையா?' என கூறி கடுமையாக தாக்கினர். அடி தாங்க முடியாத சார்லஸ் ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார்.
இதனை அடுத்து அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் என 20 பவுன் நகைகள், விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர். இதுபோக அவரை மிரட்டி சார்லஸின் வங்கி கணக்கிலிருந்து நாற்பதாயிரம் ரூபாய் பணத்தையும் கூகுள்பே மூலம் அபகரித்தனர். பின்னர் சார்லஸை அங்கிருந்து விரட்டி விட்டுள்ளனர்.
உல்லாசம் அனுபவிக்கலாம் என சென்ற இடத்தில் இது போல் சம்பவம் நடைபெற்ற சார்லஸுக்கு காயம் ஏற்பட்டிருந்ததால், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு யாரும் இல்லை. ஆனால், ஆண்ட்ரியாவும் அவரது கணவர் கோகுல கிருஷ்ணன் ஆகிய இருவருமே இச்சம்பத்துக்கு மூல காரணமாக செயல்பட்டது தெரிய வந்தது.
போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ரேகா சாவித்திரியும், போலீஸ்காரராக நடித்த நவீன் குமார் (வயது 23) என்ற இருவரும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருப்பது தெரிந்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
60 வயதாகும் ரேகா சாவித்திரி கைதான நவீன் குமாருக்கு பாட்டி முறை சொந்தம் என தெரிய வந்தது. கைதான ரேகா சாவித்திரி இதுபோல சபல புத்தி கொண்ட ஆண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் நகைகளை பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்ததாகவும் அவர் மீது வடபழனி போலீஸ் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
கைதான ரேகா சாவித்திரி, நவீன் குமார்சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீசார் தரப்பில் கூறுகின்றனர் மேலும் நவீன் குமார் 500 ரூபாய் பணத்துக்காக இந்த கொள்ளை சம்பவத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தலைமறைவான ஆண்ட்ரியா அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
