Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மனைவியை கொலை செய்து விட்டு விபத்து என்று நாடகமாடிய கணவர் மற்றும் அவர் நண்பர்கள்: ஏன் தெரியுமா?

On May 30, 2025
n6663246691748589891368b717e6d5f106022b1a99b9c79115388f0518c1dbb6ab809889663b3c530adcdd
Share

சாஹிராம் சைனி என்ற நபர், தனது மனைவி கிருஷ்ணா சைனியை கொலை செய்து, ரூ.52 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெற திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

மே 12ஆம் தேதி இரவு காரி கிராமம் அருகே இந்த சம்பவம் நடந்தது. ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்று புகார் அளித்த சாஹிராம், போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி, திட்டமிட்ட கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

தகவலின்படி, சாஹிராம் மே 11ஆம் தேதி தனது மனைவியை நவல்கர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, பாகேரா கிராமத்தில் உள்ள ஓட்டலில் சச்சின் குமாவத்துடன் சந்தித்து, ரூ.50,000 ரொக்கப் பணம் மற்றும் ஒரு வெற்று காசோலையை கொடுத்து, கொலை ஒப்பந்தம் செய்துள்ளார்.



பின்னர், மே 12 அன்று இரவு, கிருஷ்ணாவை பைக்கில் அழைத்து சென்ற சாஹிராம், பத்வாசி கிராமம் அருகே பைக்கை திட்டமிட்டபடி கீழே கவிழ்த்துவிட்டு, பின்னால் வந்த காரில் அமர்ந்திருந்த சச்சின் மற்றும் மற்றவர்கள் கிருஷ்ணாவை கற்களால் தாக்கி கொன்றனர்.

கொலையின் பின்னர், சம்பவத்தை விபத்து என காட்டும் வகையில் சாஹிராம் ஆம்புலன்ஸை அழைத்து, போலீசில் விபத்து புகாரை பதிவு செய்தார். ஆனால் போலீசாரின் சந்தேகம் அதிகரித்தது. பரிசோதனை அறிக்கைகள், சிசிடிவி காட்சிகள், சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையிலும் கிருஷ்ணாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது மற்றும் பைக்கின் சேதமும் மிகச்சிறியது என்பதை போலீசார் குறிப்பிட்டனர்.

விசாரணையில் சிக்கிய சாஹிராம், இறுதியில் தனது தவறை ஒப்புக்கொண்டு, ரூ.52 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெறும் நோக்கத்துடன் இந்த கொலைக்கு பங்குபற்றியதை வாக்குமூலமாக கூறியுள்ளார். இதில் எல்ஐசி காப்பீடு, பைக் காப்பீடு மற்றும் தங்கக் கடன் காப்பீடு ஆகியவை அடங்கும்.



ஏற்கனவே தனது முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்திருந்த நிலையில், கிருஷ்ணாவை இரண்டாவது திருமணமாக எடுத்து வைத்திருந்தார். ஆனால் காசுக்காக தன்னுடைய புதிய மனைவியையே கொலை செய்துள்ள இந்த சம்பவம், மக்கள் மனதை உலுக்கியுள்ளது.

இந்த கொலை தொடர்பாக சாஹிராம், சச்சின், முகேஷ், பிரதீப், அம்ரித் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, காதல், நம்பிக்கை, குடும்பம் ஆகியவற்றை விட பணம் முக்கியம் என்ற எண்ணத்தால் ஒரு கொடூரமான சதி நடந்துள்ளது , போலீசாரின் துல்லியமான விசாரணையில் உண்மையை வெளிச்சத்துக்கு வந்தது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.