Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குடும்பம் நடத்துவதற்காக திருடனாக மாறிய நபர் : பெங்களூருவில் அதிர்ச்சி!

On May 30, 2025
n6663904301748589484447b66b61b834ca1ed6e5e380352645602f5f4a1357c22c57c8d2f3cf349b2b4ba0
Share

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பப்பா ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது நிறைய திருட்டு வழக்குகள் உள்ளன.

இவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவரிடம் இருந்து 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவரை கைது செய்ததன் மூலம் கிட்டத்தட்ட 8 திருட்டு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்பத்தை நடத்துவதற்காக தொழில்முறை திருடனாக மாறியது தெரியவந்தது. அதாவது இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 9 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்வதற்காக தான் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இவரது 3 மனைவிகளும் வெவ்வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒருவர் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக தொழில் முறை திருடனாக மாறிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.