மனைவியின் திறமையை வெளிப்படுத்த, ரோட்டு கடையை ஆரம்பித்த அமெரிக்க ஐடி ஊழியர்: வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் ஐடி நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக it ஊழியராக வேலை பார்த்த மனிந்தர் சிங் தனது வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றி உள்ளார். இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர், மற்றவர்கள் போல வேலை தேடாமல், புதுமையான முயற்சிக்கு களம் இறங்கினார். அவர் தற்போது, பஞ்சாபின் மொஹாலி நகரில் தெருவோர உணவுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
மனிந்தர் சிங் தனது மனைவியின் சிறந்த சமையல் திறமையை தொழிலாக மாற்ற முடிவு செய்தார். இந்த யோசனையுடன், மொஹாலியின் ஃபேஸ்-5 பகுதியில் உள்ள 3B2 சந்தையில், கல்யாண் ஜுவல்லர்ஸ் எதிரே ஒரு சிறிய உணவுக் கடையைத் தொடங்கினார். தற்போது, இந்தக் கடை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அவர் உணவு வலைப்பதிவாளர் ஒருவருடன் பேசிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் மனிந்தர் கூறியதாவது, "நான் 12 ஆண்டுகளாக ஐடி துறையில் பல வேலைகளை செய்துள்ளேன். நியூயார்க்கில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியதும் உண்மை. ஆனால் என் தந்தையின் மரணத்துக்குப் பிறகு, வாழ்க்கையை வேறுபாடாக பார்க்க ஆரம்பித்தேன். என் மனைவியின் திறமையை தொழிலாக மாற்றலாம் என முடிவு செய்தேன்." இந்த வீடியோ இணையத்தில் வைரலான பிறகு, "ஒவ்வொரு வேலையும் மரியாதைக்குரியது" என்றும், "இந்தியர்கள் வேலைக்கான பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் இது" என்றும் பலர் பாராட்டியுள்ளனர்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
