Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ஆக்சன் எண்டர்டெய்னர் முசாசி

On February 18, 2022
Musasi Fst Look
Share
'ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்' என்ற பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் "முசாசி". 'நடனப்புயல்' பிரபுதேவா இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம். ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகிறது. தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபு தேவா சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். 'முசாசி' என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் தோற்றம், கம்பீரமாக இருப்பதால் இணையவாசிகளின் ஆதரவும், வரவேற்பும் எதிர்பார்ப்பை விட கூடுதலாக கிடைத்து வருகிறது

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.