Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாஜக தேசிய செயலர் விழாவில் ஓபிஎஸ்-இபிஎஸ்!

On September 27, 2017
raja-bjp
Share
raja-bjp பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு 60 வயது எட்டியதை தொடர்ந்து அவருக்கு சஷ்டியப்தபூர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழா சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. OPS EPS இந்நிலையில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக எம்.பி. இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு எச். ராஜா அழைப்பிதழ்களை கொடுத்தார். athvani இந்த விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.