கமலுக்கு போட்டியாக அரசியலுக்கு வருவாரா தளபதி?

கமலின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளித்து வருகிறார் கமல். ஒரு பேட்டியில், விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கமல், அரசியலில் இடையூறாக இருந்தால் அதுதொடர்பான விமர்சனங்கள் தெரிவிக்கப்படும் என்றார். வெற்றி பெற்ற நடிகர்கள் நல்ல படங்களில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படி நல்ல படங்களில் நடித்து வருகிறார். அவரைப் போலவே தம்பி விஜய்யும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என கமல் தெரிவித்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
