நீதிபதி மீது செருப்பை வீசி எறிந்த பிரபல ரவுடி?

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணை பூந்தமல்லி உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த நிலையில், கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, திடீரென கருக்கா வினோத் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார். இதில், ஒரு காலனி நீதிபதியின் முன்பு இருந்த மேசையின் மீதும், மற்றொரு காலணி நீதிபதி முன்பும் விழுந்தது.
இதனால் நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனே அங்கிருந்த போலீசார் கருக்கா வினோத்தை அப்புறப்படுத்தினர். அப்போது, கருக்கா வினோத் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஆவேசமாக முழக்கமிட்டார். இதனைத்தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருக்கா வினோத் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிபதியை நோக்கி காலணி வீசிய காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
