Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

த வெ க வில் ஜாதி பார்க்கப்படுகிறதா? - த வெ க தொண்டர் திமுகவில் இணைந்தது ஏன்?

On January 29, 2025
637e3-cinema-spice-magazine-post-square-thumbnails-33
Share

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விஜய் தொடங்கிய நிலையில் அவர் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகப்போகிறது.

தற்போது மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாக இருக்கிறது. ‌இந்நிலையில் ஈரோடு விஜய் ரசிகர்கள் மன்றத்தில் 25 வருடங்களாக ஆனந்தகுமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் ஜாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாகவும் தனக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து விலகியுள்ளார்.

இதில் ஆனந்தகுமார் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவர் கோபி பவானிசாகர் தொகுதி பொறுப்பாளர் பதவி ஜாதி பார்த்து தனக்கு மறுக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தில் கட்சி பொறுப்புக்கு பணம் கேட்பதாக சர்ச்சைகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜாதி பார்த்து பதவி வழங்கப்படுகிறது என்று அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறி, விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி அவர் திமுகவில் அமைச்சர்கள் முன்னிலையில் இணைந்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.