Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நீச்சல் குளத்தில் பிணமாக கிடந்த மூன்று கல்லூரி பெண்கள் : போலீசார் விசாரணை.

On November 18, 2024
WhatsApp Image 2024-11-18 at 09.28.25
Share

மங்களூருின் புறநகரில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளது ஒரு தனியார் பீச் ரிசார்ட். இந்த ரிசார்ட்டுக்கு மைசூரை சேர்ந்த நிஷிதா, பார்விதி மற்றும் கீர்த்தனா என்ற இளம் பெண்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் இளம்பெண்கள் 3 பேரும் குளித்துள்ளனர். ஆனால் திடீரென 3 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். ஆனால் 3 பெரும் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் 6 அடி ஆழமாக உள்ளதால், முதலில் ஒருவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு என்றும் அவரை காப்பாற்ற முற்பட்ட மற்ற 2 பெண்களும் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனியாக நண்பர்களுடன் செல்பவர்கள், நீச்சல் குளம், ஆறு போன்ற நீர் நிலைகளின் ஆழம் தெரியாமல் இறங்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.