Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

த வெ க மாநாடுக்கு கூடுதலாக 120 ஏக்கர் தேர்வு!

On October 18, 2024
fb51a6ca-ae3c-426e-a00c-3e3610866c20
Share

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வருகின்ற வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் 87 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் வாகன நிறுத்துமிடம் போதாது. கூடுதல் இடம் தேவை மாநாட்டிற்கு வரும் வாகனங்களால் சாலை போக்குவரத்திற்கு இடையூறு கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து, மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடுதல் இடம் தேடினர். விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தை பகுதியில் பைபாஸ் கிழக்கு பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பொதுவால் என்பவருக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து, அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். விளக்கேற்றி வழிபாடுவிக்கிரவாண்டி அடுத்த எழாய் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்,36 : பெயிண்டர். இவர் நேற்று மாலை 6.00 மணியளவில் மாநாடு நடைபெறவுள்ள வி.சாலை திடலுக்கு, தனது மூன்று மகன்களுடன் வந்து அகல் விளக்கேற்றி வழிபட்டார்.இதுகுறித்து பாண்டியன் கூறுகையில், த.வெ.க., மாநாடு மழையால் பாதிக்க கூடாது. மாநாடு நடைபெறும் வரை மழை இருக்கக் கூடாது என வேண்டி, தீபபேற்றி வழிபட்டதாக கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.