காதலியை பார்க்கச் சென்ற காதலனுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி?

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது காதலி வேறு ஒருவருடன் பேசுவதை கண்டு மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார்.
பொறியியல் பட்டதாரியான மணிகண்டன், தனது சகோதரருடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். நெல்லை கோடீஸ்வரன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும், மணிகண்டனும் காதலிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 14-ஆம் தேதி இரவு மணிகண்டன் அவரது வீட்டிற்கு சென்றபோது, அந்த இளம்பெண் வேறு ஒருவருடன் பேசியது தெரியவந்தது. இதனால் மனம் வருந்திய மணிகண்டன், தாயாரை தொடர்புகொண்டு தன்னுடைய காதலி தன்னை ஏமாற்றியதாகக் கூறிவிட்டு, அழைப்பை துண்டித்தார்.
மேலும் மன உளைச்சலில் காதலியின் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மணிகண்டன் தற்கொலை சம்பவம் தொடர்பாக, நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
