காதலியை நண்பர்களுக்கு இரையாக்க முயன்ற காதலன்: தப்பித்த காதலி!

சமீப காலமாக ஆண், பெண் இருபாலரும் மது குடிப்பது என்பது சகஜமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் யார் மது குடித்தாலும், அவர்களை இந்த சமூகம் கேவலமாக பார்த்து வந்தது.
ஆனால் சினிமாக்களின் தாக்கத்தால், மது குடிப்பதே ஒரு அந்தஸ்து என்ற நிலைக்கு இன்று உயர்ந்திருக்கிறது.
மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மது குடிப்பதற்கு என்று பல்வேறு காரணங்களை கூறி, மது குடித்து வருகின்றனர். மதுப்பழக்கம் என்பது ஏழை மக்களை மட்டும் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுமே பாரபட்சம் இல்லாமல் அழித்து வருகிறது.
இளம் தலைமுறை இடையே மதுப்பழக்கம் மற்றும் போதை பழக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான 21 வயது இளம் பெண்ணுக்கு நடக்க இருந்த கொடூரத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை மேற்கு தாம்பரத்தில் தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இந்த இளம் பெண்ணுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அவ்வப்போது சென்னையில் இருக்கும் பல்வேறு, கேளிக்கை விடுதிகளுக்கு (பப்) சென்று வருவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். குறிப்பாக சென்னை கிண்டியில் உள்ள பப் ஒன்றுக்கு, வார இறுதி நாட்களில் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அவ்வாறு கிண்டியில் உள்ள பப்புக்கு அடிக்கடி சென்று வந்தபோது, நாகர்கோயில் அருகே உள்ள வடசேரி பகுதியைச் சேர்ந்த ஷாகின்(23) என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னையில் செருப்பு கம்பெனியில் டீலராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இருவரும் ஓராண்டாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது பப்புக்கு சென்று, மது போதையில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் தனியாக அறை எடுத்து, ஒன்றாக தங்கும் பழக்கமுடையவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.
அதேபோன்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், மூன்று நாள் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். எப்போதும் இருவரும் தனியாக அறை எடுக்கும்போது, அதிக அளவு மது குடித்துவிட்டு உல்லாசமாக இருப்பது வழக்கம் என கூறப்படுகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் இருவரும் திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதியில், மது குடித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் இருவரும் சேர்ந்து இருக்கும் காட்சியை, ஷாகின் தனது நண்பர்களுக்கு விருந்தளிக்க முடிவு செய்துள்ளார். தன் நண்பர்களுக்கு 'வீடியோகால் அழைப்பின்' மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ கால் மூலம் நண்பர்களுக்கு, காட்டுவதை பார்த்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய மொபைல் போனை எடுத்துக்கொண்டு, கழிப்பறைக்கு சென்று பூட்டிக் கொண்டுள்ளார். உடனடியாக தான் ஆபத்தில் இருப்பதாக, தனது தோழி ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தான் எங்கே இருக்கிறேன் என்பது குறித்து whatsapp ஸ்டேட்டஸ் வைத்ததாக தெரிகிறது.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்த பெண்ணின் உறவினர் ஒருவர், உடனடியாக பெண் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து காவல் கட்டுப்பாட்டு எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். உடனடியாக அந்த இடத்தை காவல் கட்டுப்பாட்டு போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திருவான்மியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் பிற போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இளம் பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக, ஷாகினை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
"கூடா நட்பு கேடாய் அமையும்" என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, மதுப்பழக்கத்திற்கு அடிமையான இளம் பெண், சிக்கலில் சிக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
