கள்ளக்காதலால் மருமகனை இழுத்துச் சென்ற மாமியார்!

கர்நாடக மாநிலம் முத்தேனஹள்ளி கிராமத்தில் நாகராஜு சாரதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவதாக சாரதாவை திருமணம் செய்து கொண்டார்.
அவருடைய முதல் மனைவி மூலம் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் நாகராஜ் தன்னுடைய மூத்த மகள் ஹேமாவுக்கும் தன்னுடைய தங்கை மகனான கணேஷ் என்ற 25 வயது வாலிபருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கணேஷ் வெளியே செல்லலாம் என ஹேமாவை அழைத்து சென்ற நிலையில் திடீரென மாயமாகிவிட்டார். தன்னுடைய கணவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் தொடர்பு கொள்ள முடியாததால் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் சாரதாவும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அதோடு பணம் மற்றும் தங்க நகைகள் போன்றவைகளும் காணாமல் போன நிலையில் பின்னர் தான் சாரதா மற்றும் கணேஷ் இருவரும் திட்டமிட்டு வீட்டை விட்டு ஓடியது தெரிய வந்தது.
அதாவது சாரதா மற்றும் கணேஷ் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக கள்ளக்காதலில் இருந்த நிலையில் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் சாரதா தன் கணவனிடம் பேசி தன் கள்ளக்காதலனான கணேஷூக்கு ஹேமாவை திருமணம் செய்து வைத்துள்ளார்.
அதாவது தன் மகளை திருமணம் செய்து வைத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கள்ளக்காதலை தொடரலாம் என அவர்கள் நினைத்த நிலையில் அதேபோன்று இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். இந்நிலையில் தன் கணவனின் செல்போனை ஹேமா பார்த்தபோது தன் அம்மாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைக் கேட்டு அவர் தன் கணவனிடம் சண்டை போட்ட நிலையில் அவர்களின் விவகாரம் வெளிச்சத்திற்கு வரவே இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
இது பற்றி நாகராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இந்த விஷயம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவி உள்ளது. மேலும் கள்ளக்காதல் சம்பவங்களால் அடிக்கடி இதுபோன்ற செய்திகள் வெளியாவது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
