Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உல்லாசத்திற்கு வரவில்லை என்றால் நிர்வாண படங்களை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டிய சென்னை இளைஞர்கள்: போலீசார் கைது!

On April 29, 2025
WhatsApp Image 2025-04-28 at 22.48.35
Share

நேற்று முன் தினம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி இலவச அழைப்பு எண்ணான 1098க்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில், சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த ஒருவர், "தனது மகள் மல்லூர் அருகே உறவினர் வீட்டில் தங்கி,தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருவதாகவும், தனது மகளுக்கு சென்னையைச் சேர்ந்த வாலிபர்களுடன் இன்ஸ்டாகிராம் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உல்லாசத்திற்கு வரவில்லையெனில் நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்" என்றுகண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் அந்த மாணவி தங்கியிருந்த உறவினர் வீட்டுக்கு சென்றபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த வாலிபர்கள் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த கிஷோர்(22), முகமது அலி(22) என்பது தெரிய வந்தது.

கிஷோர் லேப்டெக்னீசியனாகவும், முகமதுஅலி மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் இருவரும் மாணவியை மிரட்டியதை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து அந்த இரண்டு வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக போலீசாரிடம் கிஷோர் அளித்த பரபரப்பு வாக்குமூலம், "இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாணவியுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் நான் காதலிப்பதாக கூறி, அந்த மாணவியிடம் உருக உருக பேசினேன். ஒரு கட்டத்தில் மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக இருக்க கூறினேன். அதற்கு மாணவி மறுத்தார். அப்போது நாம் இரண்டு பேரும் காதலர்கள் தானே, நான் தானே உன்னைத் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறியதும், அதனை நம்பிய மாணவி வீடியோ காலில் முழு நிர்வாண கோலத்தில் நின்றார்.

உடனடியாக அதை நான் வீடியோ எடுத்து எனது செல்போனில் பதிவு செய்து கொண்டேன். பின்னர் நான் மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நானும், எனது நண்பர் முகமது அலியும் சேலம் வந்துள்ளோம். எங்களிடம் உல்லாசத்திற்கு வரவில்லை என்றால் நிர்வாணமாக எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டினேன்.

அதன் பின்னர் மாணவியை அழைத்து செல்ல உறவினர்கள் வீட்டின் அருகே நாங்கள் சுற்றி வந்த போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

கிஷோர், முகமது அலி செல்போன்களை பறிமுதல் செய்ததுடன் இதேபோன்று அவர்கள் வேறு யாரையாவது மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.