இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் இதோ..

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா, இந்தியாவிலும் கோரதாண்டம் ஆடி வருகிறது. கொரோனா பாதிப்பால் நாட்டு மக்களின் உடல்நலம் மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1,90,535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் இதுவரை 5,394 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 230 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 91,818 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,835 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு இதுவரை 2,286 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 29,329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 22,333 பேரும் டெல்லியில் 19,844 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
