Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

Which one is first? MGR or Samar?:

•On December 28, 2012
15x10 - 1
Share
MGR- ஆ?, சமரா? குழப்பத்தில் விஷால் படங்கள்: விஷாலின் இரண்டு படங்கள் ரெடியாகி விட்டாலும் கூட ரிலீசுக்கு தயாரில்லை. ஒன்று முன்னரே பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட மத கஜ ராஜா (MGR). மற்றொன்று டிசம்பர் 28-ம் தேதி வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட சமர். இப்போது சமர் படம் தள்ளிப் போய்விட்டது. பொங்கலுக்கு இந்தப் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர் நிதிப் பிரச்சினையில் சிக்கியிருப்பதால் இந்த ஒத்தி வைப்பு என்று கூறப்படுகிறது. இரண்டு வார கெடுவுக்குள் சிக்கலைச் சமாளித்து வெளியிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இப்படி அறிவித்துள்ளனர். ஆனால் இந்த ஒத்தி வைப்பால் விஷாலின் இன்னொரு படமான மத கஜ ராஜாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் மதகஜ ராஜாவை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார் சுந்தர் சி. இந்த நிலையில் ஒரே நேரத்தில் மத கஜ ராஜாவும், சமரும் வெளியானால் இரு படங்களுமே அடிவாங்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. சமர் படத்தை பாலாஜி ரியல் மீடியா தயாரித்துள்ளது. மதகஜ ராஜாவை ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பேசி சுமூகமாக படத்தை வெளியிட்டால் இரு தரப்புக்கும் சுபமே!!  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.