என்ன செஞ்சாலும் சினிமால செய்யணும் - விக்ரம்-ன் கொள்கை ரகசியம்!

தான் முதன் முதலாக இயக்கிய மீரா படத்தின் நாயகன் விக்ரமுடன் 'ஐ' படத்தில் பணியாற்றி வருகிறார் இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம்.
தற்போது விக்ரமைப் பற்றி P.C.ஸ்ரீராம் கூறுகையில், “விக்ரம் நடிகனாக மட்டுமல்ல. மனிதனாகவும் ரொம்ப ஜென்டில்மேன். ஆச்சர்யப்படக்கூடிய ஒரு உழைப்பாளி. ஒரு ஹீரோவுக்கு நீங்க என்னலாம் சினிமா இலக்கணம் வெச்சிருந்தாலும் அது இல்லாத ஹீரோ அவர். தன்னை நடிகனாக மட்டுமே முன்நிறுத்திக் கொள்கிற ஒருத்தர். 'நமக்கு இவ்வளவு தான் வரும்'னு பெரும்பாலும் பயப்படுவாங்க. ஆனா, விக்ரம் 'தனக்கு இதெல்லாம் வருமா'னு சோதனை பண்றதையே வேலையா செய்றவர்.
மீரா படத்தில் ஹீரோவாக நடிச்ச விக்ரம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் 'குருதிப் புனல்' படத்துல டப்பிங்லாம் பேசினார். என்ன செஞ்சுட்டு இருந்தாலும், அதை சினிமால செய்யணும்கிறது தான் அவரோட ஐடியா. என்னைப் பொருத்தவரை திறைமையோடு கூடிய முயற்சிங்கிற விஞ்ஞானம் தப்பே பண்ணாது. அதுக்கு சரியான உதாரணம் விக்ரம் தான்” என்றார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
