இயக்குனர் பாண்டிராஜ்-ன் காதல் கதையில் சிம்பு!

கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப் பிறகு புதிய படத்துக்கு கதையை உருவாக்கி, அதில் தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தார் பாண்டிராஜ். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தனுஷால் நடக்க முடியவில்லை. இதனையடுத்து சிம்புவை அணுகியுள்ளார் பாண்டிராஜ்.
காதலும், நகைச்சுவையும் கொண்ட இந்தக் கதையை்க கேட்ட சிம்பு, தானே அதில் நாயகனாக நடிக்க முன்வந்தார். நாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார். இதர நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அவர் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார். குறளரசன் போட்டு காட்டிய டியூன்கள் பிடித்துப் போய் இப்படத்துக்கு அவரையே இசையமைக்க வைத்தாராம் பாண்டிராஜ். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்பு தயாரிக்கிறார். அடுத்த வாரம் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
