விக்ரம் பிரபுவின் அடுத்த மூணு படங்கள்!!

“கும்கி” வெற்றிப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு “எங்கேயும் எப்போதும்” சரவணன் இயக்கும் இவன் வேற மாதிரி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. டிசம்பரில் ரிலீசாகிறது.
இதனையடுத்து சிகரம் தொடு படத்தில் நடித்து வருகிறார். தூங்கா நகரம் கவுரவ் இயக்கி வருகிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இமான் இசையில், விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இது ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை சொல்லும் படம். விக்ரம் பிரபுக்கு ஜோடி மோனல் கஜ்ஜார். இப்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும், குலுமானலியிலும் நடந்து வருகிறது.
இதனையடுத்து ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
