Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குழந்தைகள் தினத்தில் பயமுறுத்த வரும் "பிட்சா 2"!!

•On November 11, 2013
Villa-The-Pizza-2-Chennai-Theatre-List-Poster
Share
Villa-The-Pizza-2-Chennai-Theatre-List-Poster ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம், ‘பீட்சா 2 வில்லா'. இந்தப் படத்தை தீபன் சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடிக்க, சந்தோஷ் நாராயண் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து, படத்தின் ஆடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ‘பீட்சா' தந்த மாறுபட்ட ட்ரீட்டை போன்று ‘பீட்சா 2 வில்லா' படமும் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ட்ரீட் ஆக இருக்கும்' என்கிறார்கள் படக்குழுவினர்!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.