வின்சென்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்!

விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களையும், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன் போன்ற படங்களையும் தந்தவர் வின்சென்ட் செல்வா. தற்போது அவர் இயக்கத்தில் வெளிவரத்தயாராக இருக்கும் படம் துள்ளி விளையாடு.
யுவராஜ் – தீப்தி ஜோடியாக நடிக்க பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடிப்பில், ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்த விஜய், வின்சென்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார். "கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்டோர் புதுமுகங்களாக இருந்தாலும், எனக்கு இந்தப் படம் புதியவர்கள் நடித்ததாகவே தெரியவில்லை... நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போட்டியை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்," என்றார். படத்தின் பாடல்களை வெளியிட்டவரும் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. யு சான்றிதழ் பெற்றிருக்கும் துள்ளி விளையாடு விரைவில் வெளியாகவிருக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
