திருமணத்திற்கு 'தல'யை அழைத்த ஜி.வி.!!

முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், பாடகி சைந்தவியை காதலித்து வந்தார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். அவர்களின் திருமணம் சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் ஜூன் மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு காதல் ஜோடி தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து வருகிறது.
இந்நிலையில் அவர்கள் அஜீத் மற்றும் குடும்பத்தாரை சந்தித்து அழைப்பிதழ் அளித்துள்ளனர். அஜீத் நடித்த கிரீடம் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களை தங்கள் திருமணத்திற்கு அழைத்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபுதுமுகங்கள் நடிக்கும் “3டி – தேடி பிடி அடி”!
