Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தலைவா பாடல் லீக் - கமிஷனரிடம் புகார் அளித்த விஜய்!

•On June 6, 2013
DSC_0194
Share
DSC_0194 துப்பாக்கி படத்திற்கு பின் இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தலைவா. சந்திரப்ரகாஷ் ஜெயின் தயாரிக்கும் இந்த படத்தில் அமலா பால் நாயகி. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் விஜய் பாடிய “வாங்கண்ணா வணக்கம்னா” என்ற பாடல் வெளியானது. இதனை அறிந்த இயக்குனர் விஜய் அதிர்ச்சியடைந்தார். இதனால் தயாரிப்பாளர் சந்திரப்ரகாஷ் ஜெயின் அவர்களுடன் நேற்று முன்தினம் சென்னை மாநகர கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார் இயக்குனர் விஜய். பின்னர் நிருபர்களிடம் இயக்குனர் விஜய் கூறும் போது, "எனது இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தலைவா படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தின் இசையை இந்த மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தோம். இந்த நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய பாடல் ஒன்று இணையதளத்தில் சில விஷமிகளால் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் இதனை வெளியிட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம். இதன் மீது கமிஷனர் தகுந்த நடவடிக்கை எடுத்து இதுபோல் மேற்கொண்டு நடக்காமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்" என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.